கொலிவுட்டில் புளு ஒசன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.சித்திரைச்செல்வன் தயாரிக்கும் படம் ‘தலைவன்’.
உளவுத்துறை பட இயக்குனர் ரமேஷ் செல்வன் இயக்கும் இந்தப் படத்தில் அறிமுக நடிகர்களான பாஸ்- நிகிஷா படேல் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர்.
நகைச்சுவை நாயகனாக கொமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஊட்டி அருகே உள்ள கொடநாடு- மிலிட்டேன் பகுதியில் நடந்து வருகிறது.
நடிகர் சந்தானத்துக்கு இன்று பிறந்த நாள். இதனை முன்னிட்டு படப்பிடிப்பு குழுவினர் ஐம்பது கிலோ எடைகொண்ட பெரிய கேக் வர வைத்திருந்தனர்.
சந்தானம் படப்பிடிப்புக்கு காலை எட்டு மணிக்கு வந்ததும் அந்த கேக்கை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தார்.
பின்பு படப்பிடிப்பில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடினார்.
அவருக்கு கதாநாயகன் பாஸ், கதாநாயகி நிகிஷா படேல், தயாரிப்பாளர் சித்திரைச்செல்வன், இயக்குனர் ரமேஷ்செல்வன், ஒளிப்பதிவாளர் எஸ்.கே.பூபதி, நடிகர் ஜெயப்பிரகாஷ், விடிவி கணேசன், மோனிகா, மீரா கிருஷ்ணன் உட்பட அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்பு ஏற்பாடு செய்திருந்த 1000 லட்டுகளை மிலிட்டேன் கிராம மக்களுக்கு வழங்கினார். கிராம மக்கள் அவருக்கு உற்சாகத்துடன் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக