யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை ஐயனார் கோவிலடி பகுதியில், ஐந்து பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. யாழ் மாநகர சபையின்
முன்னாள் பணியாளர், மார்க்கண்டு பொன்னம்பலம் என்பவரது வீட்டிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் பொன்னம்பலமும், அவரது மனைவியும் மாத்திரம் வசித்து வருகின்றனர்.
நேற்று (20) இரவு 9.15 மணியளவில் சமையலறையின் ஓட்டைப்பிரித்து வீட்டிற்குள் இறங்கிய திருடர்கள், பொன்னம்பலத்தின் மனைவியின் கண்கள் மற்றும் கால்களைக் கட்டிவிட்டு, கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு பணம் நகைகளைத் தேடியுள்ளதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
பின்பு பொன்னம்பலத்தின் மனைவியின் தோட்டையும்,வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஞானவைரவர் ஆலயத்தின் பவுணிலான சூலத்தையும், நான்காயிரம் ரூபா பணத்தையும் திருடிச்சென்றுள்ளனர்.
இதேவேளை பொன்னம்பலத்தில் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இவர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த பொலிஸார் விசாரணைகளை நடாத்தியுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக