புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் தலைவரான டொமினிக் ஸ்டிராஸ்கான் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவும் முயற்சித்து வந்தார்.

ஆனால் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் இவர் நியூயார்க் நகருக்கு சென்றிருந்தார்.

அப்போது சோஃபிடெல் என்ற ஹோட்டலில் தங்கியிருந்த இவர் மீது அந்த ஹோட்டலில் பணியாற்றிய நஃபிசாட்டோ டியாலோ என்ற பெண், பாலியல் குற்றச்சாட்டை சர்வதேச ஊடகங்களின் வாயிலாக சுமத்தினார்.

டொமினிக் ஸ்டிராஸ் கான் தங்கியிருந்த அறையை சுத்தப்படுத்த நான் உள்ளே நுழைந்தபோது, என்னை கட்டிப்பிடித்து கட்டிலில் தள்ளி இயற்கைக்கு மாறான வகையில் என்னுடன் உடலுறவு கொள்ள முயற்சித்தார் என்று பேட்டியில் அந்த பெண் கூறியிருந்தார்.

இதனையடுத்து, சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்ய நேரிட்டது. பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி கனவும் தகர்ந்தது. டயாலோவின் குற்றச்சாட்டின் பேரில் ஸ்டிராஸ் கானை பொலிசார் கைது செய்தனர்.

நியூயார்க்கில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் அவர் 42 நாட்கள் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டிருந்தார். 6 லட்சம் அமெரிக்க டொலர்களை செலுத்தி சொந்த ஜாமினில் விடுதலையான அவர் மீது, நியூயார்க் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

63 வயதான ஸ்டிராஸ் கான் விரும்பினால், புகார்தாரருடன் பணம் தந்து சமரசம் செய்துக்கொள்ளலாம் என்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த மாதம் கருத்து தெரிவித்தார்.

இதனையடுத்து, 15 லட்சம் அமெரிக்க டொலர்களை தந்து டயாலோவுடன் அவர் சமரசம் செய்துக்கொண்டதாக பிரான்சில் இருந்து வெளியாகும் 'லி ஜர்னல் டு டிமான்சே' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், பிரான்ஸ் நாட்டில் உள்ள கார்ல்டன் ஹோட்டலில் அறை எடுத்து, உயரதிகாரிகளுக்கு பாலியல் தொழிலாளர்களை வைத்து 'செக்ஸ் விருந்து' அளித்த குற்றச்சாட்டின் கீழ் இவர் மீது பிரான்ஸ் நீதிமன்றத்தில் இன்னும் வழக்கு நடைபெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top