திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டியை சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவர் நேற்று இரவு வீட்டில் தனிமையில் தூங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. உடனே அவர் எழுந்து வந்து கதவை திறந்தார். அப்போது வெளியே 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர்.
அவர்கள் திடீர் என்று குறித்த பெண்ணை வீட்டுக்குள் தூக்கி சென்றனர். பின்னர் அவர்கள் 2 பேரும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தனர்.
2 வாலிபர்களும் பெண்ணின் கழுத்தில் கிடந்த 4 1/2 பவுன் தங்க நகையையும், ஒரு செல்போனையும் பறித்தனர். மேலும் பீரோவில் இருந்த ரூ.1500-ஐயும் கொள்ளையடித்துவிட்டு சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து திருநகர் பொலிசில் அந்தப் பெண் புகார் செய்துள்ளார். அதன் பேரில் பொலிசார் வழக்குபதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று வாலிபர்களை தேடி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக