தினமும் உறவுக்கு அழைத்த கணவரின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி கைது செய்யப்ட்டார்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் இந்திராநகர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் சாலமன்ராஜ்(58). இவர் வீட்டையொட்டி மளிகைகடை நடத்தி வந்தார். இவர மனைவி பாக்கியசீலி (51). இவர்களுக்கு திருமணமான மகள்(28), பிளஸ் 1 படிக்கும் மகள் (16), இரண்டு மகன்கள் உள்ளனர்.
இரவில் வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக படுத்து தூங்குவது வழக்கம். ஆனால் சாலமன்ராஜ் மட்டும் தனியாக மாடிக்கு சென்று படுத்துக் கொள்வாராம். நள்ளிரவில் பிள்ளைகள் தூங்கியபின் அவர் கீழே சென்று மனைவியை மாடிக்கு அழைத்து வந்து உறவில் ஈடுபடுவாராம். இது மனைவிக்கு பிடிக்கவில்லை. வளர்ந்த பிள்ளைகள் வீட்டில் இருக்கும்போது இப்படி நடந்து கொள்கிறீர்களே இது உங்களுக்கே நல்லா இருக்கா? என்று கணவரை கண்டித்துள்ளார். ஆனால் அவர் அதை பொருட்படுத்தாமல் தினமும் செக்ஸ் டார்ச்சர் செய்துள்ளார்.
வழக்கம்போல் நேற்று மாடியில் தூங்கிக் கொண்டிருந்த சாலமன்ராஜ் நள்ளிரவு கீழே இறங்கிச்சென்று மனைவியை உறவுக்கு அழைத்துள்ளார். அவர் வரமறுத்ததால் வலுக்கட்டாயமாக அவரை மேல அழைத்துச் சென்றுள்ளார்.
மாடியில் வைத்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாக்கியசீலி அங்கு கிடந்த விறகு கட்டையால் கணவரை தாக்கினார். இதில் அவர் சுருண்டு விழுந்தார்.ஆனாலும், ஆத்திரம் அடங்காத பாக்கியசீலி கீழே இறங்கிவந்து வீட்டில் கிடந்த அம்மிக்குழவியை மாடிக்கு எடுத்துச்சென்று, சாலமன்ராஜ் தலையில் போட்டு நசுக்கினார்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். அவரின் அலறல் சத்தத்தை கேட்டு கீழே தூங்கிக்கொண்டிருந்த பிள்ளைகள் மாடிக்கு ஓடிவந்தனர். அங்கு தந்தை கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வேறு வழியின்றி தாயை போலீசில் சரணடையும்படி கூறினர்.
இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 4.30மணிக்கு பாக்கியசீலி தாளமுத்துநகர் போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்
0 கருத்து:
கருத்துரையிடுக