கொலிவுட்டில் மெரினா வெற்றிக்கு பின்பு இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வரும் புதிய படம் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’. விமல், சிவகார்த்திகேயன், பிந்து மாதவி, ரெஜினா, சூரி உள்பட பலர் நடிக்கின்றனர்.
இதன் சமீபத்திய படப்பிடிப்பு திருச்சியில் நடந்தது.
அங்கு, அப்பாவுக்கும் மகனுக்குமான வசனக் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது, அப்பாவாக நடித்த மனோஜ்குமார் வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்களை சிவகார்த்தியேனிடம் சொல்வார்.
அதை சீரியசாக நின்று கேட்டுவிட்டு, பின்பு அதை ஜாலியாக எடுத்துக் கொண்டு சிரித்தபடி ஓடவேண்டும். இந்த காட்சியில் நடித்தபோது, சிரிப்பதற்கு பதிலாக சிவகார்த்திகேயன் அழுதுவிட்டார். இதனால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து படக்குழுவினர் கூறுகையில், அப்பா - மகன் இருவரும் பேசும் அந்த காட்சி ரொம்பவும் உருக்கமானதாக இருக்கும். மனோஜ்குமார் பேசும்போது, தனது தந்தை ஞாபகத்துக்கு வந்ததாகக் கூறி சிவகார்த்திகேயன் அழுதுவிட்டார்.
பின்பு இயக்குனர் அவரை சமாதானப்படுத்தினார் என்றும் சில மணி பரபரப்புக்கு பின்னர் அந்த காட்சி மீண்டும் படமாக்கப்பட்டது எனவும் கூறினர்.
0 கருத்து:
கருத்துரையிடுக