புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கன்னியாகுமரி நரிக்குளம் 4 வழிச்சாலை பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் கார் ஒன்று வந்தது. இருட்டான பகுதிக்கு சென்ற அந்த காரில் இருந்து 3 வாலிபர்கள் இறங்கினர்.


பின்னர் காருக்குள் இருந்து 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரை வெளியே இழுத்து, ரோட்டோரத்தில் போட்டு விட்டு வேகமாக சென்று விட்டனர். மயங்கிய நிலையில் கிடந்த அந்த இளம்பெண்ணின் ஆடைகள் அலங்கோலமான நிலையில் இருந்தன.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து உடனடியாக கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அந்த இளம்பெண்ணை அவசர சிகிச்சைக்காக கன்னியாகுமரியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த இளம்பெண் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது.

சிகிச்சைக்கு பிறகு சகஜ நிலைக்கு வந்த அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். வள்ளியூர் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் அந்தப்பெண்ணை காட்டு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். நன்றாக மது குடிக்க வைத்துள்ளனர். பின்னர் போதை ஏறிய அந்தப்பெண்ணை ரோட்டில் வீசிவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது.

காரில் தப்பிய வாலிபர்களின் பெயர் விவரத்தையும் அந்த பெண் கூறியுள்ளார். இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று மது அருந்த செய்து 3 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்து இருக்கலாம் என்றும், இளம்பெண் மயங்கியதால் 4 வழிச்சாலையில் போட்டு விட்டு சென்று இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து வழக்கு பதிந்து 3 வாலிபர்களையும் தேடி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top