புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வறுமை காரணமாகவும், அண்ணன் மீது வைத்திருந்த பாசம் காரணமாகவும் இளம் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்ட பரபரப்பு சம்பவம் ஒன்று கொக்குவில் நேதாஜி பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. அதே
பகுதியைச் சேர்ந்த சுமார் 25 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவருக்கு தகப்பன் இல்லை. தாயுடன் மிகவும் கஸ்ரமான சூழ்நிலையில் வறுமையில் வளர்ந்துள்ளார்.

திருமணமான அண்ணாவிற்கு காய்ச்சல் வந்து மருத்துவமனையில் படுத்த படுக்கையாக கிடந்துள்ளார்.

அவரது மனைவியும் புறக்கணித்து தள்ளிய நிலையில், தங்கையே சென்று அவரைப் பார்த்து வந்துள்ளார். சுகமடைந்ததும் அண்ணாவை வீட்டிற்கு அழைத்து வர முடியாமல் மாமி ஒருவர் அண்ணாவை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதனால் மிகவும் மனம் உடைந்திருந்த இவர் கடன் தொல்லையையும் வறுமையையும் தாங்க முடியாமல் உறவினர் ஒருவருடைய வீட்டிற்கு சென்று தற்கெலை செய்து கொண்டுள்ளார்.

இவரது சடலம் கோப்பாய் பொலிஸாரால் மீட்க்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அண்ணன், தங்கை பாசத்தை நாம் எத்தனையோ படங்களில் சித்தரித்துப் பார்த்திருப்போம் ஆனால் இங்கே உண்மையில் இச்செய்தியைக் கேட்ட பலர் கண் கலங்கினார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top