புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சீனாவின் தென்மேற்குப் பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 113 பேர் பலியாகினர்.


சீனாவின் தென்மேற்குப் பகுதியில் சிச்சுவான் மாகாணத்தில் யான் நகரத்தை மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் உலுக்கியது. கிட்டதட்ட 20 வினாடிகள் வரை நிலநடுக்கம் நீடித்தது. இந்த நிலநடுக்கத்தில் 113 பேர் உயிரிழந்தனர். மேலும் 600 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆனால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்க கூடும் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2008 -ம் ஆண்டு இதே பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு 90 ஆயிரம் பேர் பலியாகினர். அதற்கு பிறகு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பூகம்பம் இது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top