புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


லண்டனின் உள்ள மூன்று வீடுகளில் தங்கி வீட்டு வேலை செய்து வந்த இந்தியப் பெண்ணொருவர் கற்பழிக்கப்பட்டு பல சித்திரவதைகளை அனுபவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 4 குழந்தைகளுக்கு தாயான 39 வயது பெண் 2005-ம் ஆண்டுமுதல் வீட்டு தொழிலாளியாகவும் சிறார் பராமரிப்பாளராகவும் வேலைபார்த்துள்ளார்.

அவரை மூன்று பேர் அடித்தும், கற்பழித்தும், காலாவதியான உணவை கொடுத்தும் சித்திரவதை செய்துள்ளனர். இதனால் குறித்த பெண் நோய்வாய்ப்பட்டிருந்து இருக்கிறாள்.

அடிமையாக நடத்தப்பட்ட அந்த பெண்ணின் பாஸ்போர்ட்டையும் பறித்து வைத்துள்ளனர்.

இதுகுறித்த வழக்கில் ஓபராய் 54, யூசூப் 33 ஆகிய இருவரும் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டது. இதில் ஓபராய் என்பவர் மீது கொலை மிரட்டல் விடுத்ததாகாவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாலாபோவி 54 என்பவர் அந்த பெண்ணை கற்பழித்ததாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் அடுத்தமாதம் தண்டனை வழங்கப்படவுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top