புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பூலோகம், என்றென்றும் புன்னகை படங்களில் நடித்து வரும் த்ரிஷா இந்த படங்களோடு உறவுக்காரர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு டாடா காட்ட திட்டமிட்டிருந்தார்.


ஆனால், திடீரென்று வந்த ஒரு புதிய படவாய்ப்பு அவரது மனநிலையை மாற்றி விட்டது.

அதனால் திருமணத்தை அப்புறம் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லி கல்யாண கனவுகளில் நீந்திக்கொண்டிருந்த மாப்பிள்ளைக்கு பெரிய அதிர்ச்சி கொடுத்து விட்டாராம் த்ரிஷா.

என்ன காரணம்? என்று விசாரித்தபோது, ப்ரியம் படத்தை இயக்கிய பாண்டியன் தற்போது ஒரு புதிய படம் இயக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அந்த படத்தில் மூன்று கதாநாயகிகளாம்.

இரண்டு வேடங்களுக்கு சுனைனா, ரம்யா நம்பீசனை புக் பண்ணியவர், இன்னொரு முக்கிய வேடத்தில் நடிக்க த்ரிஷாவை அணுகினாராம்.

முதலில் மூன்று கதாநாயகியா? என்று இரண்டு மனதாக கதையைக்கேட்ட த்ரிஷா, உங்களுக்கு ஒரு கோடி சம்பளம் என்று சொன்னதும், கவிழ்ந்து விட்டாராம்.

அப்படின்னா, உடனே படப்பிடிப்பு ஆரம்பிச்சிடுங்க என்றாராம். அதைக்கேட்ட இயக்குனர், நீங்கள் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொள்ளயிருப்பதாக கூறப்படுகிறதே? என்று சொன்னபோது, என்னைப்பொறுத்தவரை எனது முதல் கணவரே சினிமாதான்.

அதுக்கு அப்புறம்தான் கட்டிக்கப்போறவரு. அதனால் நீங்க கேட்க திகதியில கால்சீட் தர்றேன். கல்யாணத்தை அடுத்து வருடத்துக்கு தள்ளி வச்சிட்டாப்போச்சு என்று சொல்ல, இயக்குனருக்கு ஷாக் ஆகிப்போச்சாம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top