பரதேசி படத்தை வெற்றிப்படமாக்கிய இத்தருணத்தில் அடுத்த படத்தை எடுப்பதற்கு தயாராகி விட்டார் இயக்குனர் பாலா.
இந்த முறை அண்ணன், தம்பி கதையை கையில் எடுத்திருக்கும் பாலாவிற்கு கதாநாயகன்
கிடைக்கவில்லையாம்.
அண்ணன் கதாபாத்திரத்திற்கு தன்னுடைய சீடன் சசிகுமாரை தெரிவு செய்த பாலாவிற்கு தம்பி கதாபாத்திரத்திற்கு நடிப்பதற்கு நாயகனை தெரிவு செய்ய காத்திருக்கிறார்.
பாலா இயக்கத்தில் நடித்தால் மகனின் எதிர்காலம் பிரகாசமாகி விடும் என்று நினைத்த இளையதிலகம் விக்ரம் பிரபுவை எப்படியாவது பாலாவின் பட்டறைக்குள் தள்ளி விட்டு விட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
ஆனால் சசிகுமாரை விட விக்ரம் பிரபு சற்று முதிர்ந்தவர் போல் தோன்றுவதால், தற்போது கெளதம் கார்த்திக்கை தெரிவு செய்ய நினைத்திருக்கிறார் பாலா.
இதுகுறித்து பேசுவதற்கு கௌதம் கார்த்திக்கின் தந்தை நவரச நாயகன் கார்த்திக்கிடம் பேசியுள்ளார் பாலா.
பாலாவின் விருப்பத்தை தெரிந்து கொண்ட கார்த்திக், உங்கள் படத்தில் நடிக்க என் பையன் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கூறியதுடன், ஒரு நிபந்தனையையும் விதித்திருக்கிறார். கார்த்திக்கின் நிபந்தனையைக் கேட்ட பாலா அப்படியே ஆடிப் போய் விட்டாராம்.
வேறொன்றுமில்லை, "நான் தேர்தலில் நிற்கிற தொகுதியில எனக்கு ஆதரவாக நீங்க பிரச்சாரம் பண்ணனும்" என்பது தான் அந்த நிபந்தனையாம்.
படிக்கிற நமக்கே இவ்வளவு ஷாக் இருக்கும்போது பாவம் இயக்குனர் பாலாவுக்கு எவ்வளவு ஷாக் இருந்திருக்கும்.
0 கருத்து:
கருத்துரையிடுக