சென்னை பாடி புதுநகரை சேர்ந்தவர் உமா (25). பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள சுங்க அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் கோகுல்நாத் (31). தம்பதிக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. கருத்து வேறுபாடு காரணமாக உமா கணவரை பிரிந்து தனியாக வசிக்கிறார்.
கோகுல்நாத் மனைவியிடம் குடும்பம் நடத்த வரும்படி கூறி அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார். இதற்கு உமா சம்மதிக்கவில்லை.இந்த நிலையில் நேற்று பாரிமுனையில் காத்திருந்த கோகுல்நாத் மனைவி வேலை முடிந்து வெளியே வந்ததும் வீட்டிற்கு அழைத்துள்ளார்.
உமா கணவரை கண்டுகொள்ளாமல் புறப்பட்டு சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த கோகுல்நாத், துப்பட்டாவை பிடித்து இழுத்து உமாவை மானபங்கம் செய்தாக தெரிகிறது.
அங்கிருந்தவர்கள் தட்டி கேட்டதால் கோகுல்நாத் தப்பியோடி விட்டார்.
இது குறித்து உமா, வடக்கு கடற்கரை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கோகுல்நாத்தை கைது செய்து விசாரிக்கிறார்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக