புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தமிழ் திரையுலகில் புன்னகை இளவரசி என பெயர் பெற்றவர் சினேகா.


கடந்த ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பிறகும் நடித்து வருகிறார். அண்மையில் வெளியான ஹரிதாஸ் திரைப்படத்தில் சினேகாவின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.

இதனிடையே சினேகாவை சந்தித்து இயக்குனர் ஒருவர் கதை கூறியிருக்கிறார். கதை மிகவும் பிடித்திருந்தும் அதில் நடிக்க மறுத்திருக்கிறார் சினேகா.

இது குறித்து அவர் கூறியதாவது: கணவன்-மனைவியின் அன்யோன்யத்தை சொல்லும் நல்ல கதைதான். ஆனால் படுக்கையறை காட்சிகள் எல்லாம் வைத்திருக்கிறார்கள். அதுவும் மேலோட்டமாக இல்லாமல் ரொம்பவும் ஆழமாக வைத்திருக்கிறார்கள்.

திருமணத்திற்கு பிறகும் இதுபோன்று மற்ற நடிகர்களுடன் அதிக நெருக்கமாக நடித்தால் அது குடும்பத்தில் சர்ச்சைகளை உண்டாக்கும். முந்தைய படங்களில் இதுபோன்று நடித்தபோதேல்லாம் நான் தனி மனுஷி. ஆனால் இப்போது நான் இல்லத்தரசி என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top