ரஷ்யாவின் இர்குட்ஸ்க்(Irkutsk) என்ற நகரத்தை சேர்ந்த பிசொட்டடு விட்டலி(BesottedVitaly) என்ற 33 வயது நபர், பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தபொழுது ஒரு பெண்ணை பார்த்துள்ளார்.
இரண்டு நிமிடங்களே பார்த்த விட்டலி அந்த பெண்ணின் காதல் பார்வையில் வீழ்ந்துள்ளார். அந்த நேரம் பார்த்து பேருந்து வந்து விடவே, அடுத்த நாள் காலை 8 மணிக்கு இதே பேருந்து நிலையத்திற்கு வந்துவிடுமாறு அவரிடம் அந்த பெண் கூறிவிட்டு சென்றுவிட்டார்.
மறுநாள் மிகவும் பொறுப்பாக காலை 8 மணிக்கே பேருந்துநிலையத்திற்கு சென்ற விட்டலி, தன்னுடைய திடீர்க்காதலி வெகுநேரமாகியும் வராமல் இருந்ததை பார்த்து திடுக்கிட்டுள்ளார். அன்று முதல் விட்டலி வீட்டுக்கே செல்லாமல் கடந்த இரண்டு மாதங்களாக அதே பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறார்.
இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, ‘தன்னுடைய திடீர்க்காதலியின் பெயர் மரியானா என்று ஆரம்பிக்கும் என்றும் கண்டவுடன் காதல் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை என்றாலும் அந்த பெண்ணின் கண்ணில் தெரிந்த உண்மையான காதலுக்காக நான் இரண்டு மாதங்களாக இதே பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டு நிற்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கண்டிப்பாக தன்னுடைய காதலி வருவார் என்ற நம்பிக்கையுடன் கையில் பூங்கொத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்.
HELLO
பதிலளிநீக்கு