உயிர், மிருகம், சிந்துசமவெளி போன்ற விவகாரமான படங்களை இயக்கியவர் சாமி தற்போது புதிய படமொன்றை இயக்குகிறார்.
இதில் உயிர் படத்தில், கணவன் இறந்து விட்டதால் கொளுந்தனை அண்ணி திருமணம் செய்து கொள்ள நினைக்கும் கதை.
அதேபோல், சிந்து சமவெளியில் அப்பா மகளாக இருக்க வேண்டிய மாமன், மருமகள் உறவை கணவன் மனைவி உறவாக்கி ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களின் எதிர்ப்புக்கு ஆளானார்.
அதனால் இனிமேல் அந்த மாதிரியான ஆபாச படங்களை இயக்க மாட்டேன் என்று முடிவெடுத்திருக்கும் சாமி, தற்போது கங்காரு என்றொரு படத்தை இயக்குகிறார்.
கங்காரு படத்தைக் குறித்து கூறுகையில், காதல், அன்பு, பாசம், கோபம், தாபம் என்ற குடும்ப உறவுகளுக்கிடையே நடைபெறும் நிகழ்வுகளை கொண்டு எடுத்திருக்கும் இந்தப் அனைவருக்கும் பிடிக்கும்.
இதற்கு முன்பு எடுத்த படத்தின் மூலம் கோபம் கொண்ட அம்மாக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள அம்மாக்களெல்லாம் இந்த படத்தை விரும்பிப் பார்த்து என்னை பாராட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக