நீர்கொழும்பு-தூங்கிக் கொண்டிருந்த தனது ஒரு வயதுக் குழந்தையை அருகிலுள்ள சேற்றுக்குழிக்குள் போட்டுக் கொலை செய்தது தொடர்பாக குழந்தையின் தாயையும் பாட்டியையும் இம்மாதம்
27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீர்கொழும்பு மஜிஸ்திரேட் நீதவான் ஏ.எம்.என்.பி. சமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.
ஜா- எல இதிமிட்டிய தீபசிகா கிராமத்தைச் சேர்ந்த 22 மற்றும் 42 வயதான இரு பெண்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களாவர்.
இக் குழந்தையை தூங்கிய நிலையிலேயே வீட்டில் விட்டுவிட்டு அருகிலுள்ள வீடொன்றுக்குச் சென்று திரும்பி வந்தபோது குழந்தையைக் காணவில்லை என தாய் கந்தான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் குழந்தையின் தாயும் பாட்டியுமே குழந்தையை கொலை செய்ததாக தெரிய வந்ததையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக