புதுவருடத்தை முன்னிட்டு தந்தை தனது இளைய சகோதரிக்கு மட்டும் புத்தாடைகள் வாங்கிக் கொடுத்தமையால் மனமுடைந்த சகோதரி தன்னுயிரை மாய்க்க தூக்கில் தொங்கி மரணமான சம்பவம் வவுனியா குருமண்காடு பிரதேசத்தில்
இடம்பெற்றுள்ளது.
சிவராசா நிதிஷா என்ற 21 வயது யுவதியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
இதுபற்றி தந்தை தெரிவிக்கையில், நான் தச்சுவேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன்.
பண வசதி போதாமையால் குடும்பத்திலுள்ள மூன்று பெண் பிள்ளைகளுக்கும் புத்தாண்டுக்கு உடுப்பு வாங்க முடியவில்லை.
கடைசி மகள் இருதய வருத்தத்தினால் பாதிக்கப்பட்டவள். ஆகையால் அவளுக்கு மட்டும் உடுப்பு வாங்கிக் கொடுத்தேன்.
இதனால் மனமுடைந்த மகளே நுளம்பு வலைக்குள் கட்டியிருந்த கயிற்றில் தூக்கிலிட்டு மரணமடைந்துள்ளார் என்று கூறியுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக