புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக இருந்து, "செல்லமே" மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் விஷால்.



சண்டகோழி, திமிரு போன்ற பல வெற்றிப் படங்கள் மூலம் அதிரடி நாயகனாக மக்கள் மனதில் இடம் பெற்றார். பாலாவின் "அவன் இவன்" படத்தில் இப்படி ஒரு நடிப்பா என்று எல்லோரையும் பிரமிக்க வைத்தார்.

தற்போது, சுந்தர்.சி இயக்கத்தில் "எம்.ஜி.ஆர்" படத்தில் நடித்து முடித்து விட்டு, 'மலைக்கோட்டை' வெற்றி இயக்குனர் பூபதிபாண்டியன் இயக்கத்தில் கொமடி கலந்த அதிரடி படமான "பட்டத்து யானை" படத்தில் நடித்து வருகிறார்.

இதையடுத்து இவர் நடிக்கும் புதிய படத்தின் பெயர் "பாண்டிய நாடு" என்ற பிரமாண்டமான படத்தின் மூலம் விஷால் முதன் முறையாக தயாரிப்பாளராகிறார். இவர் தனது நிறுவனத்திற்கு விஷால் பிலிம் பேக்டரி என்று பெயரிட்டுள்ளார்.

விஷால் பிலிம் பேக்டரியின் முதல் இயக்குனராக சுசீந்திரன் ஒப்புக்கொண்டுள்ளார். 'நான் மகான் அல்ல' என்ற யதார்த்தமான ஆக்ஷன் படத்தை தந்த இவர் இப்படத்தின் கதையையும் வித்தியாசமான கதை அமைப்பாக உருவாக்கியுள்ளார்.

ரிவென்ஜ் - ஆக்ஷன் படமாக இப்படம் இருக்கும் என்கிறார் இயக்குனர், விஷால் இப்படத்தில் மதுரையில் வாழும் ஒரு சாதாரண பையனாக நடிக்கிறார்.அவரது ரிவென்ஜ் நம்மை அதிர வைக்கும் என்கிறார்.

விஷால் ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மேலும் சூரி,விக்ராந்த், வைரவன், 'ஆரண்யகாண்டம்' சோமசுந்தரம் உட்பட பலரும் நடிக்கின்றனர்.

'மே' மாதம் 15ம் திகதி முதல் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. மதுரை, குன்னூர், நெல்லை போன்ற இடங்களில் படமாக்கப்படும் இப்படம் தீபாவளி வெளியீடு ஆகும்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:

கதை, திரைக்கதை & இயக்கம் - சுசீந்திரன்

இசை - டி.இமான்

ஒளிப்பதிவு - மதி

பாடல்கள் - வைரமுத்து

வசனம்- பாஸ்கர்சக்தி

கலை - ராஜீவன்

எடிட்டிங் - ஆண்டனி

ஸ்டன்ட் - அனல் அரசு

நடனம் - ஷோபி

தயாரிப்பு மேற்பார்வை - ஆண்டனி சேவியர்

தயாரிப்பு - விஷால்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top