புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா-கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள கெலமங்கலத்தி அடுத்த, காமன்பாளையத்தை சேர்ந்தவர் லோகேஷ் வயது-34,  லாரி டிரைவரான இவரது மனைவி பகவத்கீதா, வயது-24.இவர்களுக்கு ரக்ஷீதா, வயது-5, ஜெகநாதன், வயது-2, மற்றும், ஆறு மாத
கைக்குழந்தை என மொன்று குழந்தைகள் உள்ளது.

லோகேஷ், வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் சென்று விடுவதால், பகவத்கீதாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த கணேஷ், வயது-28, என்பவருக்கும் “கூடாநட்பு” ஏற்பட்டுள்ளது.

அக்கம் பக்கத்தினர் மூலம் இந்த “கூடாநட்பு” விபரத்தை அறிந்த லோகேஷ், மனைவியை எச்சரித்து கண்டித்துள்ளார். அதன் பிறகும்,இருவருக்கும் இடையே நெருக்கம் தொடர்ந்து கொண்டு இருந்ததால், லோகேஷுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, லோகேஷ் தன்னுடைய வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, லோகேசின் மனைவி பகவத்கீதாவுடன், அவரது கள்ளக்காதலன் கணேஷ் உல்லாசமாக இருந்துள்ளார்.

அப்போது, வீட்டுக்கு வந்த லோகேஷ், தன் மனைவி, கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்து ஆத்திரமடைந்தார். இருவரையும் கொலை செய்ய திட்டமிட்ட லோகேஷ் லாரியின் சஸ்பென்சரில் உடைந்துபோன பழைய இரும்பு ராடு ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு  வீட்டுக்கு வெளியே காத்திருந்தார்.

அப்போது,  பகவத்கீதாவுடன் உல்லாசமாய் இருந்துவிட்டு வெளியே வந்த கணேஷை வழிமறித்து, இரும்பு ராடால் தலையில் அடித்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த கணேஷ்,அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். அதே வேகத்தில் வீட்டுக்குள் சென்ற லோகேஷ், தனதுமனைவி பகவத்கீதாவின் தலையிலும் இரும்பு ராடால் ஓங்கி அடித்துள்ளார்.

தலையில் பலமாக அடிபட்டு மயங்கி விழுந்த மனைவி பகவத்கீதவின் உயிர் போகவில்லை, துடித்துக்கொண்டிருந்த அவரின் கழுத்தில், கத்தியால் குத்தி, படுகொலை செய்தார். அதன் பின்னர் நேராக கெலமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு நடந்து சென்று அங்கு போலீசாரிடம் சரணடைந்த லோகேஷ், மனைவியையும், கள்ளக்காதலனையும் கொலை செய்த விபரங்களை தெரிவித்தார்.

இதுகுறித்து தகவலறிந்த தேன்கனிக்கோட்டை ஏ.எஸ்.பி., விஜயகுமார், இன்ஸ்பெக்டர் பாஸ்கர், மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று, கொலையான இருவர் உடல்களை கைப்பற்றினர்.

லோகேஷிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், "நண்பனாக இருந்த கணேஷ், என் மனைவியிடம் கள்ளத்தொடர்பு வைத்திருந்தான். என்னுடைய மூன்று குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இந்த தொடர்பை நிருத்திவிடும்படி  இருவரையும் பலமுறை எச்சரித்தேன்.

ஆனால், அவர்கள் தங்களின் கள்ளத்தொடர்பை நிறுத்தவில்லை, நேற்று  இருவரும் ஒன்றாக வீட்டிற்குள் இருந்ததால், நண்பனாக இருந்து எனக்கு துரோகம் செய்த கணேஷையும், என் மனைவியையும் வெட்டி கொன்றேன்' என  வாக்குமூலம் கொடுத்துள்ளார் லோகேஷ்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top