புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை தான் பெங்களூர் எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று விஸ்வரூபம் எடுத்த கிறிஸ் கேலின் ருத்ரதாண்டவத்தில் பல்வேறு சாதனைகள் உடைந்து நொறுங்கின. வெறும் 30 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 8 பவுண்டரி, 11 சிக்சருடன்
அவர் விளாசிய சதம், கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேக சதமாக அமைந்தது.
* ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி 37 பந்திலும், டெஸ்ட் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் 56 பந்திலும் சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளனர்.
* டி20 போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் பிரெண்டன் மெக்கல்லம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக 73 பந்தில் 158 ரன் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த சாதனையை தகர்த்து முன்னேறிய கிறிஸ் கேல் 66 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 175 ரன் விளாசி (13 பவுண்டரி, 17 சிக்சர்) முதலிடம் பிடித்தார்.
*ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன் எடுத்ததே (2010) அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 263 ரன் குவித்து அந்த சாதனையை தகர்த்தது.
* உலக அளவில் டி20ல் இலங்கை அணி கென்யாவுக்கு எதிராக 260 ரன் குவித்து முதலிடத்தில் இருந்தது (களம்: ஜோகன்னஸ்பர்க், செப். 2007). அந்த சாதனையும் நேற்று உடைந்து நொறுங்கியது.

டாப் 10 அதிவேக சதங்கள்

டி20 போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய 10 முன்னணி வீரர்கள் விவரம்:
எண்    வீரர்    பந்து    எதிரணி    களம்    ஆண்டு
1    கிறிஸ் கேல் (ஆர்சிபி)    30    புனே வாரியர்ஸ்    பெங்களூர்    2013
2    சைமண்ட்ஸ் (கென்ட்)    34    மிடில்செக்ஸ்    மெய்ட்ஸ்டோன்    2004
3    வாண்டெர் (நமிபியா)    35    கென்யா    விந்தோக்    2011/12
4    யூசுப் பதான் (ராயல்ஸ்)    37    மும்பை இந்தியன்ஸ்    மும்பை    2009/10
5    ஸ்டைரிஸ் (சசெக்ஸ்)    37    குளோசெஸ்டர்    ஹோவே    2012
6    செஷாத் (பர்னர்ஸ்)    40    துரோந்தோ ராஜ்ஷாகி    தாக்கா    2011/12
7    பாஸ்மேன் (ஈகிள்ஸ்)    41    லயன்ஸ்    பாட்செப்ஸ்ட்ரூம்    2004/05
8    டேவிட்ஸ் (கோப்ராஸ்)    41    வாரியர்ஸ்    கேப் டவுன்    2008/09
9    பி.எப்.ஸ்மித் (வொர்செஸ்டர்)    42    கிளமார்கன்    வொர்செஸ்டர்    2005
10    கில்கிறிஸ்ட் (டெக்கான்)    42    மும்பை இந்தியன்ஸ்    மும்பை    2007/08

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top