சச்சின் இன்று தனது 40வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தற்போது ஐபிஎல் போட்டிகளில் ஆடிவரும் சச்சின் இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெறும் கொல்கத்தா நைட்
ரைடர்ஸ் அணிக்கு எதிராக களமிறங்குகிறார். மீண்டும் பார்மிற்கு திரும்பியுள்ள அவர் இன்று அதிரடியால் ரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்து கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சச்சின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. சச்சினின் 40 வயதை குறிக்கும் வகையில் 40 கிலோ எடையுள்ள பிரமாண்ட கேக் வெட்டப்படுகிறது. சாக்லேட் சுவை கொண்ட இந்த கேக் கானா மற்றும் மடகாஸ்கரில் இருந்து விஷேசமாக வரவழைக்கப்பட்டுள்ளது. கேக்கை சுற்றிலும் சச்சின் 40 வகையான ஸ்டில்கள் வரையப்பட்டுள்ளது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் சச்சினுக்கு முன்னாள், இந்நாள் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். டிவிட்டரிலும் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. மேலும் அரசியல் பிரமுகர்கள், விஐபிக்களும் வாழ்த்தி வருகின்றனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக