சவுதி அரேபிய சிறையில் இருந்து இரு இலங்கைப் பணியளர்களை மீட்டு நாட்டுக்கு திருப்பி அனுப்ப சவுதி அரேபியர் ஒருவர் 22 ஆயிரம் சவுதி றியால்களை வழங்க முன்வந்துள்ளார்.
சவுதி அரேபிய வீடொன்றில் பணி புரிந்த இரு இலங்கையர்கள் தங்களது பணி இடத்திலிருந்து தப்பிச் சென்று சவுதி தூதரகத்தில் தஞ்சம் புகுந்தனர்.
தங்களால் மீண்டும் பணிக்குச் செல்ல முடியாது என அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இது குறித்து றியாத் பொலிஸார் விசாரணைகளை நடத்திய போதும் இவர்கள் இருவரும் பணி புரிந்த இடத்தை அடையாளம் காண முடியவில்லை.
எனினும் இவர்கள் சவுதியில் பணி புரிவதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.
ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று பணிகளை செய்யத் தவறியதால் ஒவ்வொருவருக்கும் தலா 11,000 சவுதி றியாள் அறவிடப்பட்டது.
அந்த பணத்தை செலுத்த முடியாது சிறையில் இருந்த நிலையிலேயே சவுதி அரேபியாவைச் சேர்ந்த நபர் ஒருவரால் மீட்கப்பட்டுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக