அஜீத் குமார், ஷாலினி இன்று தங்கள் 13வது திருமண நாளைக் கொண்டாடுகின்றனர்.
அஜீத் குமார் சக நடிகையான ஷாலினியை காதலித்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த ஒரே படம் அமர்க்களம். அப்போது தான் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. 1999ம் ஆண்டு அமர்க்களம் ஷூட்டிங்கில் அஜீத் ஷாலினியிடம் தனது காதலை தெரிவித்தார். ஷாலினியும் அவரது காதலை ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து 24-4-2000 அன்று அஜீத், ஷாலினி திருமணம் நடந்தது. அவர்கள் திருமணத்திற்கு ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட ஏராளமான நடிகர், நடிகையர்கள் வந்து மணமக்களை வாழ்த்தினர்.
அஜீத், ஷாலினிக்கு திருமணமாகி இன்றுடன் 13 ஆண்டுகள் ஆகின்றன.
அஜீத், ஷாலினி அன்பின் அடையாளமாக அவர்களுக்கு 5 வயதில் அனௌஷ்கா என்ற மகள் உள்ளார்.
வரும் 1ம் தேதி அஜீத் தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆனால் விஷ்ணுவர்தன் படத்தின் ஷூட்டிங் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் நடப்பதால் அங்கு தான் தனது குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடுகிறார் 'தல'.
0 கருத்து:
கருத்துரையிடுக