சுவிட்சர்லாந்திலுள்ள பேசேல் நகரில் மதியம் 1.30 மணி அளவில் ஒரு பேருந்து சாலையில் சென்று கொண்டிருக்கும்பொழுது அதன் ஓட்டுநர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதனால் பேருந்து சாலையில் வளைந்து வளைந்து நிலை தடுமாறி ஓடியதில் அதிலிருந்த பயணிகள் உதவி கேட்டு அலறியுள்ளனர்.
இதில் ஒரு பெண் பேருந்தின் கதவு மீது மோதி மயங்கி விழுந்துள்ளார். அப்பேருந்தினுள் இருந்த ஒரு பிரெஞ்சுக்காரர் மட்டும் நிலைமையைப் புரிந்து கொண்டு ஓட்டுநர் இடத்திற்கு விரைந்து சென்று பிரேக்கை மிதித்து பேருந்தை நிறுத்தியுள்ளார்.
வேறோரு பயணி பேருந்தின் கதவை உடைத்து வெளியே சென்று பயணிகள் பத்திரமாகக் கீழே இறங்க உதவினார். கதவில் மோதி காயம்பட்ட பெண்ணும், ஓட்டுநரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பேருந்தை நிறுத்திய பயணியின் செயல் துணிவு மிக்கது மற்றும் பாராட்டுக்குரியது என்று காவல்துறையின் செய்தித் தொடர்பாளரான மார்டின் ஷீட்ஸ்(Martin Schütz ) தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக