தான் திருமணம் செய்துகொண்ட கணவனையும் 1 ½ வருடக் குழந்தையையும் வேண்டாம் என்று, கள்ளக் காதலனுடன் ஓடிப்போய்விட்ட 18 வயது தாயார் பற்றிய செய்தி அம்பலங்கொட பொலிஸாரிடமிருந்து கிடைத்தது.
18 வயதுடைய அந்தப் பெண் எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவள். 14 வயதில் மத்துகமையிலுள்ள இளைஞன் ஒருவனைக் காதலித்திருக்கிறாள். அவர்களது காதல் முற்றிவிட, வீட்டாருக்குத் தெரியாமல் ஓடிவிட்டிருக்கிறாள் அவள்.
பின்னர் பெற்றோர் மூக்கை நுழைத்து மகளை வீட்டுக்கு அழைத்துவந்து, திருமண வயதை அடைந்ததும் அவளுடன் ஓடிப்போனவனுக்கே திருமணம் செய்து கொடுத்திருக்கின்றனர். அந்த இளைஞன் அவளை இழுத்துச் செல்லும் போது அவனுக்கு வயது 17. எந்தவொரு தொழிலும் இல்லாமல் இருந்திருக்கிறான் அவன்.
பின்னர் அவர்களிருவரும் ஒரு குழந்தைக்குப் பெற்றோராயினர். இதேவேளை, வத்துகெதர பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் உறவுமுறை சொல்லிக் கொண்டு அவர்களது வீட்டுக்கு அடிக்கடி வந்துபோயுள்ளான். அவனுடனும் அவள் யாருமறியாமல் தகாத உறவு வைத்திருக்கிறாள்.
இந்த இளைஞனும் 19 வயது மதிக்கத்தக்க ஒருவன். தொழிலாக வியாபாரம் செய்துவந்திருக்கின்ற அவன், அவளுக்கு அடிக்கடி பண உதவி செய்திருக்கின்றான்.
அவனது பணத்திற்கு ஆசைப்பட்ட அவள், வத்துகெதர வாலிபனுடன் யாருக்கும் தெரியாமல் வத்துகெதரவுக்குச் சென்று குடும்பம் நடாத்தியிருக்கிறாள். சட்டபூர்வமாகத் திருமணம் செய்துகொண்ட கணவனையும், குழந்தையையும் மறந்துவிட்டே அவள் அவ்வாறு குடும்பம் நடாத்தியிருக்கிறாள்…
குழந்தை தாயைத் தேடி வீறிட்டுக் கத்துவதைப் பொறுக்கவியலாத அந்தப் பெண்ணின் பெற்றோர் மற்றும் கணவன், கடந்த 7 ஆம் திகதி அம்பலங்கொடை பொலிஸாரிடம் குழந்தைக்குத் தாய் வேண்டும் என மனுகொடுத்துள்ளனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட பொலிஸார், பெண்ணின் பெற்றோருடனும் கணவனுடனும் குழந்தையுடனும் கள்ளக் காதலனின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
அங்கு….
அந்தக் குழந்தை தன் தாயைக் கண்டதும் வீறிட்டு அழத் தொடங்கியுள்ளது. உடனே அந்தப் பெண் ஓடிச்சென்று, அந்தக் குழந்தையை எடுத்து உச்சிமோந்து, பால் கொடுக்கத் தொடங்கியிருக்கிறாள்.
உடனே பொலிஸார், கள்ளக் காதலனையும், அந்தப் பெண்ணையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக் காதலன் பொலிஸாருக்கு இதுபற்றித் தெரிவிக்கும் போது,
அவர்கள் இருவரும் சட்டபூர்வமாக தற்போதுள்ள கணவனிடமிருந்து விவாகரத்துப் பெறுவதற்காக சட்டரீதியாக வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளான்.
எதுஎவ்வாறாயினும்,
கள்ளக் காதலனுடன் ஓடிவிட்ட அந்தப் பெண் அவனோடு குடும்பம் நடாத்தவே விடாப்பிடியாக நின்றிருக்கிறாள். விடயத்தை நன்கு உணர்ந்துகொண்ட பொலிஸார்,
குழந்தையை மனதில் இருத்தி தற்போதைக்கு சட்டபூர்வமான கணவனாருடன் செல்லுமாறும், தனக்கு விருப்பம் இல்லையாகில் பின்னர், சட்டரீதியாக பிரிவதற்காக ஏற்பாடுகள் செய்யுமாறும் அந்தப் பெண்ணுக்குக் குறிப்பிட்டுள்ளனர்.
சட்டபூர்வமான கணவனின் தற்போதைய வயது 21. மனைவிக்கு வயது 18. குழந்தைக்கு வயது 1 ½. கள்ளக் காதலனுக்கு வயது 19.
அம்பலங்கொட பொலிஸ் தலைமையக சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொலிஸ் பரீட்சகர் தமயந்தி ராஜபக்ஷ மேற்படி விடயம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டார்.
0 கருத்து:
கருத்துரையிடுக