புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நாகர்கோவில்: பத்து மாதம் சுமந்து பெற்ற, 11 மாத குழந்தையை, கருணை கொலை செய்ய அனுமதி கோரி, கலெக்டரிடம், பெற்றோர் மனு
கொடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள, வண்டாவிளையை  சேர்ந்தவர்  டென்னிஸ் குமார்,  33; கூலித் தொழிலாளி.

இவருக்கும், மேரி சுஜா, 30,என்பவருக்கும், இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கர்ப்பமான மேரி சுஜா, கடந்தாண்டு, ஜூன், 4ம்தேதி மார்த்தாண்டத்தில், ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அவரை, டாக்டர்கள் பரிசோதித்து  விட்டு, 7ம் தேதி  வரும்படி கூறியுள்ளனர்.

ஆனால், அன்று இரவே, மேரி சுஜாவுக்கு, பிரசவ வலி ஏற்படவே, அதே மருத்துவமனையில், அவருக்கு, அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு, சுவாசத்தை தவிர, வேறு எந்த உடல் அசைவும் இல்லை. தாய்பால் மற்றும் வைட்டமின்கள் கொடுத்தால், சரியாகி விடும் என, டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஆனால், குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால், வேறு மருத்துவமனைக்கு, குழந்தையை, டென்னிஸ் குமார் கொண்டு சென்றார். குழந்தையின் பின் தலையில் ஏற்பட்டிருந்த பாதிப்பை, பிறந்ததும் கவனிக்க தவறியதால், இந்த நிலை ஏற்பட்டதாக, அங்குள்ள டாக்டர்கள் தெரிவித்தனர்.

தற்போது, குழந்தை பிறந்து, 11 மாதமாகி விட்டது. குழந்தையின் சிகிச்சைக்காக, பல லட்ச ரூபாயை, டென்னிஸ்குமார், செலவு செய்துள்ளார்.

குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் டென்னிஸ் குமார் கூறியிருப்பதாவது:

குழந்தையின் சிகிச்சை செலவை   அரசு ஏற்க வேண்டும்; குழந்தையின் இந்த நிலைக்கு காரணமான, டாக்டர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். சிகிச்சையில் குணமாக்க முடியாத பட்சத்தில், குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்; இல்லாவிட்டால், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.




 
Top