சவூதி அரேபியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் உலகின் மின உயரமான எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் முதன் முறையாக ஏறி சாதனை படைத்துள்ளார்.
கிரபிக் டிசைன் பட்டதாரியான ரஹா மொஹர்ரக் என்ற 25 வயதான வயதான பெண்ணே இவ்வாறு எவரெஸ்ட்டில் ஏறி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதற் சவூதி பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
இவர் 4 பேர் கொண்ட குழுவுடன் இணைந்து மலை ஏறி கடந்த சனிக்கிழமை எவரெஸ்ட் சிகரத்தை எட்டியுள்ளார்.
இது குறித்து ரஹா மொஹர்ரக் கூறுகையில், சௌதிப் பெண்கள் புதிய சாதனைகள் படைப்பதற்கு எனது முயற்சி உந்துசக்கதியாக அமையும் என தான் நம்புகிறேன். அடுத்து வருபவர்களுக்கு ஊக்கமாக இருக்கப் போகிறோம் என்பதைக் காட்டிலும் முதலில் வந்தோம் என்பது ஒன்றும் முக்கியமானது அல்ல என தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவில் பெண்களுக்கென ஏராளமான கட்டுப்பாடுகள் உண்டு. அவ்வாறான தடைகளை கடந்து தனது இலக்கினை அடைந்துள்ளார் ரஹா என ரஹாவின் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் கல்வி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்காகவே அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த மலையேறும் முயற்சியை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.