பொலன்நறுவை, மகசென்புர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு 15 வயதான சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று (18) மாலை வேளையில் இடம்பெற்றுள்ளது. இக் கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத அதேவேளை சந்தேகநபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இவரது சடலம் பொலன்நறுவை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.