சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது
திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார்.
தானியங்கி முறை செயல்பட்டதால் ஓட்டுநர் "பெடலில்" இருந்து காலை எடுத்து விட்ட பின்னரும் கூட வண்டி தொடர்ந்து ஓடி இடையில் எங்கும் நிற்காமல் சோலோதூன் மாநிலத்தில் உள்ள ஓல்ட்டென் நகரில் வந்து நின்றுவிட்டது.
அங்கு ஓட்டுநரை மாற்றி மீண்டும் வண்டி தன் பயணத்தைத் தொடர 15 நிமிடங்கள் ஆயிற்று, ஓட்டுநரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
கடந்த மாதம் 22ம் நாள் இதுபோன்று ஒரு சம்பவம் பேருந்தில் நடந்தது. பேசெல் நகரில் ஓடிக் கொண்டிருந்த பேருந்தில் ஓட்டுநர் மயங்கிச் சாய்ந்ததால் வண்டி கட்டுபாட்டை மீறி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மோதியது.
பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் வண்டி இல்லை என்பதை உணர்ந்தவுடன் விரைந்து வந்து பிரேக்கை மிதித்து வண்டியை நிறுத்தினார். பயணிகள் இருவர் காயமுற்றதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.