புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ்ப்பாணத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு பெண்களின் சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று முற்பகல் வெவ்வேறு சம்பவங்களில் மரணமடைந்த இரண்டு இளம் பெண்களின் சடலங்கள் சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டன.

யாழ்.மயிலணி வடக்கு சுன்னாகம் பகுதியில் தூக்கிலிட்டு மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படும் மதிவாணன் தர்சினி (வயது 27) என்ற பெண்ணின் சடலமும், தெல்லிப்பழைப் பகுதியில் நடைபெற்ற மற்றைய சம்பவத்தில் வெளிநாட்டில் இருந்து வந்திருந்து விஜியராசா சோபிதா (வயது 33) என்ற பெண்ணின் சடலமும் இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இருவரின் சடலங்களும் யாழ்.போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
 
Top