புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தாய்வானைச் சேர்ந்த நபரொருவர் காதலியுடனான வாக்குவாதத்தினால் கோபப்பட்டு அவருடைய ஆண் குறியை அவரே கத்தரித்துக்கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு
பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தாய்வானின் ஜிலோங் எனுமிடத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட 46 வயதான நபரின் பெயர் வெளியிடப்படவில்லை.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் அவரது காதலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் போது போதையில் இருந்துள்ளார். இந்நிலையில் ஆவேசத்துடன் செயற்பட்டு அவருடைய ஆண் குறியின் 1.2 இன்ச் அளவான பகுதியை கத்தரியினால் துண்டித்துள்ளார்.

இதனையடுத்து விரைவாக செயற்பட்ட அவரது காதலி சரியான நேரத்தில் குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். இதன்போது அதிகளவான இரத்தம் வெளியேறியதால் கோமா நிலையை அடைந்துள்ளார்.

இதேவேளை துண்டாக்கப்பட்ட ஆண் குறியின் பகுதியை மீண்டும் வைத்தியர்கள் இணைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் கோமாவிலிருந்து மீண்டு விரைவில் வழமைக்கு திரும்பிவிடுவார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்றதொரு சம்பவம் கடந்த ஆண்டில் அமெரிக்காவிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
Top