மருமகளை சீரழித்த மாமனார்.. கண்டுகொள்ளாத கணவர்: 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மாமனார் செய்த காமக் கொடூரத்தை கண்டு
கொள்ளாமல், தட்டிக் கேட்காமல் கணவர் இருந்ததால் வேதனையுற்ற பெண் தனது இரண்டு குழந்தைகளையும் தூக்கில் தொங்க விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
மார்த்தாண்டம் அருகே உள்ள கழுவன்திட்டை கோட்டரவிளை வீடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (35). வேன் டிரைவரான இவரது மனைவி பெயர் வல்சலா.
30 வயதான வல்சலாவும், ராஜேஷும் காதலித்து மணந்தவர்கள். இருவருக்கும் இரு குழந்தைகள் இருந்தனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு வரும்.
இதனால் குழந்தைகளை நாகர்கோவில் ஹாஸ்டலில் சேர்த்துப் படிக்க வைத்தார் வல்சலா. பள்ளி விடுமுறை என்பதால் பிள்ளைகள் வீட்டுக்கு வந்திருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை வல்சலா, குழந்தைகள் இருவரும் பிணமாக தூக்கில் தொங்கிக் காணப்பட்டனர்.
மார்த்தாண்டம் போலீசார் 3 பேரின் பிணங்களையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் வல்சலாவின் சகோதரி ராணி போலீஸில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில் ராஜேஷின் குடும்பத்தார் மீது குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றி போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டனர்.
இதில், ராஜேஷ், அவரது தந்தை நாகமணி (68), தாயார் மேரி தங்கம் (65), சகோதரி ராணி (36) ஆகிய 4 பேர் மீதும் கொலை வழக்கு போடப்பட்டது. அவர்களில் ராஜேஷ், நாகமணியை போலீஸார் கைது செய்தனர்.
மற்றவர்கள் தப்பி விட்டனர். சிக்கிய தந்தை, மகனிடம் விசாரணை நடத்திய போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் நாகமணி செய்த அட்டூழியங்கள்.
மருமகள் என்றும் பாராமல் செக்ஸ் ரீதியாக தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார் நாகமணி. இதுகுறித்து பலமுறை கணவரிடம் அழுது புலம்பியுள்ளார் வல்சலா. ஆனால் ராஜேஷ் கண்டுகொள்ளவில்லை. இது மாமனாருக்கு வசதியாகப் போய் விட்டது.
குடிபோதையில் பலமுறை மருமகளிடம் தகாத முறையில் நடந்துள்ளார். இந்தக் கொடுமை தாள முடியாமல்தான் குழந்தைகளுடன் வாழ்க்கையை முடித்துக் கொண்டு விட்டார் வல்சலா.