ஐதராபாத் நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணை வீட்டு வேலைக்கு என்று லண்டனுக்கு அழைத்துச் சென்று கொடுமைப்படுத்திக் கற்பழித்தவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவருடன் சேர்ந்து வாழ்ந்த சஷி ஓபராய்(Shashi Obhrai)(54) என்ற பெண்ணும் இவரை அடித்துக்
கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் இவருக்கும் ஒன்றரை வருடமும், 20 மாதமும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
ஷமீனா யூசூஃப்(Shamina Yousef) என்ற பெண்ணின் வீட்டில் தான் முதலில் இந்தியப் பெண் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
ஷமீனாவும் வேலைக்கு வந்த இந்த பெண்ணை இரக்கமில்லாமல் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் இவருக்கும் 40 மணி நேரம் சம்பளம் இல்லாமல் சமூகப் பணியாற்றும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது குறித்து லிபர்ட்டி எனப்படும் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த கோரினா ஃபெர்கூசன்(Corinna Ferguson) கூறுகையில், கடந்த 2003ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை பணியாற்றிய இந்தப் பெண்ணுக்கு 2300 பவுண்ட் மட்டுமே சம்பளமாகத் தரப்பட்டுள்ளது.
மேலும் தன் பிள்ளைகளை சென்று பார்த்து வரக்கூட இந்தப் பெண்ணை அனுமதிக்கவில்லை என்று விவரித்துக் கூறினார்.