புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சுவாசிலாந்து  நாட்டு மன்னர்  3வது மஸ்வதி, என்னை தனது 14வது மனைவியாக்கத் துடிக்கிறார். எனக்கு புகலிடம் தர வேண்டும் என்றுகோரி இங்கிலாந்தில் புகலிடம் கோரியுள்ளார் அந்த
நாட்டைச் சேர்ந்த அழகிய இளம் பெண்ணான  டின்ட்ஸ்வாலோ ந கோபெனி.

22 வயதான இப்பெண்ணை,  அவரது   15வது  வயது முதலே  மனைவியாக்க  துடித்துக் கொண்டிருக்கிறாராம்  சுவாசிலாந்து மன்னர்.  இத்தனை கால  தொணத்தலைத்  தாங்க  முடியாமல்தான்  தற்போது இங்கிலாந்தில்  அரசியல் புகலிடம் கோரியுள்ளார் நகோபெனி.

மன்னரின் விருப்பத்திற்கு தான் உடன்படா விட்டால் தன்னைக் கைது செய்து விடுவார்கள், அல்லது கொன்று விடுவார்கள். எனவே என்னை சுவாசிலாந்துக்கு திருப்பி அனுப்பி விடாதீர்கள் என்றும் அப்பெண் கோரியுள்ளார்.
சுவாசிலாந்து  நாட்டு மன்னர்  3வது மஸ்வதி, என்னை தனது 14வது மனைவியாக்கத் துடிக்கிறார். எனக்கு புகலிடம் தர வேண்டும் என்றுகோரி இங்கிலாந்தில் புகலிடம் கோரியுள்ளார் அந்த நாட்டைச் சேர்ந்த அழகிய இளம் பெண்ணான  டின்ட்ஸ்வாலோ ந கோபெனி.

22 வயதான இப்பெண்ணை,  அவரது   15வது  வயது முதலே  மனைவியாக்க  துடித்துக் கொண்டிருக்கிறாராம்  சுவாசிலாந்து மன்னர்.  இத்தனை கால  தொணத்தலைத்  தாங்க  முடியாமல்தான்  தற்போது இங்கிலாந்தில்  அரசியல் புகலிடம் கோரியுள்ளார் நகோபெனி.

மன்னரின் விருப்பத்திற்கு தான் உடன்படா விட்டால் தன்னைக் கைது செய்து விடுவார்கள், அல்லது கொன்று விடுவார்கள். எனவே என்னை சுவாசிலாந்துக்கு திருப்பி அனுப்பி விடாதீர்கள் என்றும் அப்பெண் கோரியுள்ளார்.



லந்துக்கார சுவாசிலாந்து ..
சுவாசிலாந்து .. சுவாசிலாந்து என்று லந்துக்கார நாடு ஒன்று உள்ளது. 3 பக்கம் தென் ஆப்பிரிக்காவாலும், ஒரு பக்கம் மொசாம்பிக்காலும் சூழப்பட்ட குட்டியூண்டு நாடு இது. இந்த நாட்டின் மன்னர்தான் 3வது மெஸ்வதி. செம குஜால் பார்ட்டி.

பலதாரம் மணப்பது  பலகாரம் சாப்பிட்றா மாதிரி…
மெஸ்வதிக்கு இதுவரை 13 மனைவியர். அத்தோடு நிற்பதாக தெரியவில்லை இந்த அஜால் பார்ட்டி. தொடர்ந்து  மணப்பதை  ஒரு கொள்கையாகவே வைத்துள்ளார். இந்த நாட்டின் பாரம்பரியமும்  அதுதானாம். பலதாரம்  என்பது இங்கு பலகாரம் சாப்பிடுவது போலவாம்.

22 வயதுப் பெண்ணுக்கு குறி…
இப்போது 22 வயதான நகோபெனிக்குக் குறி வைத்துள்ளார் மெஸ்வதி. அதுவும் அப்பெண்ணுக்கு 15 வயதாக இருந்தபோதிலிருந்தே… துரத்தி வருகிறாராம். தனது 14வது மனைவியாக்க துடித்துக் கொண்டிருக்கிறாராம்.

பயந்து ஓடி வந்த நகோபெனி
மெஸ்வதி வைத்ததுதான் சுவாசிலாந்தில் சட்டமாம். அவரை மீறி அங்கு ஒன்றும் செய்ய முடியாதாம். இதனால் நாட்டை விட்டு வெளியேறி விட்டார் நகோபெனி.

வருஷா வருஷம் கட்டிக்கலாம்..
45 வயதாகும் இந்த மன்னர், வருடா வருடம் திருமணம் செய்ய அந்த நாட்டு ராஜ பாரம்பரியம் இடம் கொடுத்துள்ளதாம்

4வது மனைவியைப் பார்க்க வந்த இடத்தில்..
தனது நான்காவது மனைவி லாநெக்ங்கஸாவைப் பார்க்க அவருக்கு கட்டிக் கொடுத்துள்ள அரண்மனைக்குப் போனபோதுதான் நகோபெனியைப் பார்த்தாராம் மெஸ்வதி. அப்போது நகோபெனிக்கு 15 வயதுதானாம். அப்போதே முடிவு செய்து விட்டாராம் தனது அடுத்த மனைவி இவர்தான் என்று.

தொடர்ந்து நச்சரிப்பு..
நகோபெனியைப் பார்த்தது முதலே அவரை துரத்த ஆரம்பித்தாராம். அவர் படித்து வந்த பள்ளிக்கே போய் என்னைக் கட்டிக்கிறியா என்று ஜொள்ளு விட்டாராம். இதைக் கேட்டு நகோபெனி அழுது விட்டாராம்.

அரண்மனைக் கிளிகள்..
இதுகுறித்து நகோபெனி கூறுகையில், மெஸ்வதிக்கு வாழ்க்கைப் பட நான் விரும்பவில்லை. அவரது மனைவிகளை தனி அரண்மனையில் சிறைக் கைதிகள் போல வைத்துள்ளார் மெஸ்வதி. சுற்றிலும் பாடிகார்டுகள் இருப்பார்கள். அவர்கள் வெளியில் போக முடியாது. வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே ஷாப்பிங் செய்வதற்காக பாதுகாப்புடன் அமெரிக்காவுக்கு அனுப்புவார் மெஸ்வதி.

துரத்தலால் ஓடி வந்தேன்..
மன்னரின் தொடர் துரத்தல் காரணமாகவே நான் எனது நாட்டை விட்டு இங்கிலாந்து வந்தேன். தற்போது பிர்மிங்காமில் வசித்து வருகிறேன். இங்கு எனது தாயார் உள்ளார். அவர் எனது தந்தையின் தொல்லை தாங்க முடியாமல் எனக்கு முன்பே இங்கிலாந்து வந்து விட்டார்.

கொன்று விடுவார்..
நான் தற்போது அரசியல் புகலிடம் கோரியுள்ளேன்.என்னை சுவாசிலாந்துக்கு திருப்பி அனுப்பினால் கொன்று விடுவார் மன்னர் என்றார் நகோபெனி.

வில்லியம் – கேட் கல்யாணத்துக்கு வந்தாராம் மெஸ்வதி
ஆனால் இங்கிலாந்து அரசு, சுவாசிலாந்திடம் நல்லுறவு கொண்டுள்ளது. இளவரசர் வில்லியம் – கேட் கல்யாணத்துக்குக் கூட சுவாசிலாந்து மன்னர் வந்து சாப்பிட்டு விட்டு மொய் எழுதிச் சென்றாராம்.

ஏற்கனவே 6வது பொண்டாட்டி ஓடிப் போயிருச்சாம்
ஏற்கனவே மெஸ்வதியின் 6வது மனைவி அவரை விட்டு தப்பி ஓடி விட்டாராம். டார்ச்சர் தாங்க முடியவில்லையாம்.

உங்களில் யார் அடுத்த பொண்டாட்டி…??
தனது  மனைவிமார்களை மன்னர் மெஸ்வதி எப்படித் தேர்வு  செய்வார் என்றால் அதற்காகவே ஒரு விழா எடுப்பார்கள். அதில் தகுதி வாய்ந்த கன்னிப் பெண்களை அரை நிர்வாணப்படுத்தி, பாரம்பரிய டிரஸ்ஸை மட்டும் போடச் செய்து ஆட விடுவார்கள்.

அவர்களது ஆட்டத்தை  மன்னர் பார்ப்பார். பின்னர் தனது மனம்   கவர்ந்த பெண்ணைத் தேர்வு செய்து அவரை மணப்பார். இந்த விழாவுக்கு ரீட் நடன விழா என்று பெயராம். உங்களில் யார் அடுத்த பிரபு தேவா பாணியில் இவர்களில் யார் அடுத்த மனைவி என்பதைத் தேர்வு செய்யும் டான்ஸ் இது.
இப்படியும் ஒரு நாடு.. இந்த மாதிரியும் மன்னர்…!!!!

லந்துக்கார சுவாசிலாந்து ..
சுவாசிலாந்து .. சுவாசிலாந்து என்று லந்துக்கார நாடு ஒன்று உள்ளது. 3 பக்கம் தென் ஆப்பிரிக்காவாலும், ஒரு பக்கம் மொசாம்பிக்காலும் சூழப்பட்ட குட்டியூண்டு நாடு இது. இந்த நாட்டின் மன்னர்தான் 3வது மெஸ்வதி. செம குஜால் பார்ட்டி.

 
Top