புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


திடீரென வீசிய கடும் காற்று காரணமாக சிலாபம், கடற்கரை பிரதேசத்தில் 19  வீடுகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதான பேச்சாளர் தெரிவித்தார்.

வீடுகளின் கூரைகளுக்கு மட்டும் பாதிப்பு எற்பட்டுள்ளது.

இதன்போது உயிர் இழப்போ, எவருக்கும் காயமோ ஏற்படவில்லை என புத்தளம் அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதான பேச்சாளரான கேர்ணல் மனோஜ் ரணவீர தெரிவித்துள்ளார்.

சில நிமிடங்களுக்கு தொடர்ந்து கடும் காற்று வீசியுள்ளது.

அதனை டொனேடோ வர்க்க மினி சூறாவளியாக பிரதேச மக்கள் சந்தேகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான வசதிகள் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கேர்ணல் மனோஜ் ரணவீர மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top