புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


6,61,500 ரூபா பெறுமதியான தங்க குச்சிகள் ஆறை தனது பயணப் பையில் பற்பசைக்குள் மறைத்து வைத்து இந்தியாவுக்கு கடத்த முயன்ற ஒருவர் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்தியாவின் சென்னை நகருக்கு குறித்த தங்கத்தை கடத்திச் செல்ல முற்பட்ட மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட ஆறு தங்க குச்சிகளில் நான்கை பற்பசை ரியூப்புக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top