இந்தியாவில் கணவரின் குடிப்பழக்கத்தால் இளம்பெண் தற்கொலை
இந்தியா- அயனாவரம், ராஜி தெருவை சேர்ந்தவர் ஆனந்தன். அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெகதீஸ்வரி (வயது 19) இவர்களுக்கு 8 மாதத்திற்கு முன்பு திருமணம்
நடந்தது.
ஆனந்தனுக்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும் இரவில் மது அருந்தி வந்தார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. நேற்று இரவு குடிபோதையில் வந்த ஆனந்தனை மனைவி ஜெகதீஸ்வரி கண்டித்தார்.
ஆத்திரம் அடைந்த ஆனந்தன் மனைவியை திட்டிவிட்டு தூங்கச் சென்று விட்டார். இதனால் மனவேதனையில் இருந்த ஜெகதீஸ்வரி நள்ளிரவில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இன்று அதிகாலை எழுந்த ஆனந்தன் மனைவி தூக்கில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அயனாவரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. உதவி கமிஷனர் ஞானசேகரன் மற்றும் போலீசார் ஜெகதீஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனந்தனிடம் விசாரணை நடந்து வருகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக