புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ். திருநெல்வேலி பிரதேசத்தில் இன்று (07) காலை ஆண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.


பலாலி வீதி, திருநெல்வேலி சந்தைக்கு அருகாமையில் உள்ள கடைத்தொகுதிக்கு முன்பாகவே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் பிறவுன் வீதி, கொக்குவிலைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜெ. ரஞ்சனதாஸ் (வயது 56) என அடையாளம் காணப்படுள்ளார்.

நகை வியாபாரியான குறித்த நபர் வியாபார விடயமாக கொழும்பு சென்று இன்று அதிகாலை மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பியுள்ளார்.

திருநெல்வேலி பஸ்ஸில் இருந்து இறங்கி வீடு நோக்கி செல்ல முற்பட்டவேளை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

சம்பவ இடத்திற்கு சென்ற கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இவரது சடலம் பிரதே பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top