புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கம்பஹா.யக்கல பகுதியில் பாலியல் தொழிலாளர்கள் எனக் கருதப்படும் பெண்கள் மூவரையும் மற்றுமொருவரையும் கம்பஹா பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.



யக்கல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த வீடு பாலியல் தொழிலுக்காக மிக நீண்டகாலமாக நுட்பமான முறையில் பயன்படுத்தப்பட்டு வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

21, 23, 43 வயதுடைய பெண்கள் மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் குருநாகல், வலவ்வத்த, சதிக்காவத்த ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்தச் சந்தேக நபர்களை கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top