கட்டுகஸ்தோட்டையில் தோசை உட்கொண்ட மாணவிகள் வைத்தியசாலையில்
கட்டுகஸ்தோட்டையில் உணவு ஒவ்வாமை காரணமாக 10 மாணவிகள் சுகவீனமடைந்துள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை உகுரஸ்ஸபிட்டிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 8ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 10 மாணவிகளே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இம்மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
பாடசாலை வளாகத்திலுள்ள சிற்றுண்டிச்சாலையில் தோசை உட்கொண்ட பின்னர் இம்மாணவிகளுக்கு வயிற்று வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கட்டுகஸ்தோட்டை வலயக் கல்விப் பணிப்பாளர் பீ.கே.டபிள்யூ.டிக்கிரி பண்டா தெரிவித்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக