லெபனானில் இலங்கைப் பணிப்பெண் கொடூரமாக வெட்டிக்கொலை
லெபனானுக்கு வீட்டுப் பணிப் பெண்ணாக சென்ற இலங்கைப் பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளளார்.
குறித்த இலங்கைப் பணிப் பெண்ணின் சடலம் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கைகள், கால்கள், தலை, உடல் என தனித்தனியாக வெட்டப்பட்ட நிலையில் இந்த சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மஹாவௌ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான டிலிகா மதுசானி என்ற பெண்ணே இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் ஏற்கனவே பல தடவைகள் மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப் பணிப்பெண்ணாக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த பெண்ணின் சடலம் குப்பை கூளமொன்றிலிருந்து கடந்த 26ம் திகதி மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக