ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 53-வது லீக் போட்டி, மும்பையில் இன்றிரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை
இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
மும்பை அணியில் தொடக்க வீரர்களாக சச்சின் தெண்டுல்கர் மற்றும் டிவைன் ஸ்மித் களமிறங்கினார்கள். சச்சின் அதிரடியாக ஆட ஸ்மித் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சச்சின் 48 ரன்கள் எடுத்த நிலையில் பாதியா வீசிய பந்தில் போல்ட் ஆனார்.
பின்னர் வந்த தினேஷ் கார்த்திக், ஸ்மித்யுடன் ஜோடி சேர்ந்து விளையாடினார். ஸ்மித் 47 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய வீரர்கள், ரோகித் சர்மா (16 ரன்), போல்லார்ட் (4 ரன்), ராயுடு (0 ரன்), ஹர்பஜன் சிங் (0 ரன்) அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர்.
மறுமுனையில், நிலைத்து விளையாடிய தினேஷ் கார்த்திக், ஜான்சனுடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதனால் மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது.
171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரராக களமிறங்கிய அணியின் கேப்டன் கம்பீர் முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஜான்சன் வீசிய பந்தில் போல்ட் ஆனார்.
பின்னர் பிஸ்லாவுடன் ஜோடி சேர்ந்து கல்லீஸ் விளையாடினார். பிஸ்லா 17 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த யூசப் பதானும் 13 ரன்னில், ஓஜா பந்தில் போல்ட் ஆனார்.
சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட மோர்கனும் (5 ரன்) சொற்ப ரன்னில் வெளியேற, கொல்கத்தா அணி 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
பின்னர் வந்த தாஸ், கல்லீஸ்யுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினார். இந்த ஜோடியும் மும்பை அணியின் பந்து வீச்கை சமாளிக்க முடியாமல் திணறியது. கல்லீஸ் 24 ரன்னிலும், தாஸ் 23 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
இறுதியில், கொல்கத்தா அணி 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
கொல்த்தாவை வீழ்த்தியதன் மூலம் 16 புள்ளிகளுடன் மும்பை இந்தியன்ஸ் அணி 2-வது இடத்தில் உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக