இந்தியாவில் பிள்ளைகள் கொடுமைப்படுத்துவதாக மூதாட்டி புகார்
மகன் மற்றும் மகள் கொடுமைப்படுத்துவதாக கூறி, மூதாட்டி ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
மேட்டுப்பாளையம் எல். எஸ்., வீதியை சேர்ந்தவர் சரோஜினி, 65. இவரது கணவர் விஸ்வநாதன் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். மகன் மற்றும் மகளுடன் சரோஜினி வசித்து வந்தார்.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தபோது மனு அளிக்க வந்த சரோஜினி திடீரென கலெக்டர் கார் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மகன் மற்றும் மகள் தன்னை கொடுமைப்படுத்துவதாகக் கூறி, கதறி அழுதார்.
சரோஜினி கூறுகையில் ""விதவையாகிய என்னை மூத்த மகன், அவரது மனைவி மற்றும் விவாகரத்து பெற்ற மகள் ஆகியோர் தாக்கி கொடுமைப்படுத்தி வருகின்றனர். வீட்டில் இருந்த பணம் நகையை அபகரித்து சென்றுவிட்டனர்.
""எனக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருந்து என்னை அடித்து துரத்தி தினமும் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். 65 வயதான எனது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு தர வேண்டும்'' என்றார். போலீசார் அவரை சமாதானப்படுத்தி கலெக்டரை சந்திக்க அழைத்து சென்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக