புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பட்டினிச் சாவுகளை விட உண்டு கொழுத்து அதன்மூலம் நோய்பாதிப்பிற்கு ஆளாகி மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள்
எச்சரித்துள்ளனர். உலக அளவில் இது தொடர்பாக நடைபெற்ற ஆய்வில் சத்தான உணவு கிடைக்காமல் இறப்பவர்களை விட உடல்பருமனாலும், புகை, மது, போதைப் பழக்கத்தினாலும் அதிக அளவில் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
கடந்த 2010ஆம் ஆண்டில் ஏற்பட்ட மரணங்களுக்கான காரணங்களையும், அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு மரணத்தை ஏற்படுத்திய காரணங்களையும் ஒப்பிட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டில் மட்டும் உடல் பருமன் மூலம் உலக அளவில் 30 லட்சம் பேர் இறந்தனர் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

சத்துணவு இல்லை

ஆப்பிரிக்காவில் உள்ள மக்கள் பலருக்கு உண்பதற்கு போதிய உணவு கிடைக்காமல் குறைந்த வயதிலேயே மரணமடைந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக அளவில் சரியான உணவின்றி 10 லட்சம் பட்டினிச்சாவுகள் நிகழ்ந்துள்ளன.

நோய் பாதிப்பு அதிகம்

ஐந்து வருடங்கள் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளை ஒருங்கிணைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு ஐநூறு ஆராய்ச்சியாளர்கள் பங்களிப்பு செய்துள்ளனர்.

உலக மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது என்றாலும், அவர்கள் நோய்வாய்ப்படுகின்ற அளவு அதிகரித்துள்ளது என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

குறையும் உடல் உழைப்பு

மாறிவரும் உணவுப் பழக்கத்தினால் உடல் பருமன் அதிகரிக்கிறது. மேலும் உடல் உழைப்பு குறைவதும் இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.

இதயநோயால் இறப்பு

2010 நிகழ்ந்த மரணங்களில் இதயநோயும், மூளையில் ரத்தக்கசியும் நான்கில் ஒருவரின் மரணத்திற்கு காரணமாய் இருந்துள்ளது என இந்த ஆய்வு கூறுகிறது. அந்த ஆண்டில் மொத்தம் 1 கோடியே 30 லட்சம் இறப்புகளுக்கு அந்நோய்கள் காரணமாக இருந்துள்ளன.

புகை மதுப்பழக்கம்

உயர் இரத்த அழுத்தம், புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவை உடல்நலப் பாதிப்புகளின் மிகப் பெரிய காரணியாக உருவெடுத்துள்ளன என்று இந்த ஆய்வு காட்டுகிறது.

15 லட்சம் எயிட்ஸ் மரணங்கள்

தவிர எய்ட்ஸ் நோயும் உயிரிழப்புகளுக்கான பெரிய காரணங்களுல் ஒன்றாக இருக்கிறது. 2010ஆம் ஆண்டு மொத்தம் 15 லட்சம் பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.

காசநோய் மரணங்கள் குறைவு

இறப்புகளை ஏற்படுத்திய காரணங்களின் வரிசைப் பட்டியலில் நீரிழிவு நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் அதிகம் காணப்படுகின்றன. அதேசமயம் காலரா, காசநோய் போன்றவை இப்பட்டியலில் கீழிறங்கியுள்ளன

அதிகரிக்கும் இடைவெளி

மக்களின் ஆயுட்காலம் பரவலாகப் பல நாடுகளிலும் அதிகரித்துள்ளது என்றாலும், சராசரி ஆயுட்கால வயதில் செல்வந்த நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி என்னவோ குறையவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

மக்களிடையே நோயின் தாக்கங்கள் பற்றி உலக அளவில் இதுவரை இல்லாத பாரிய அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் தி லான்செட் மருத்துவ இதழில் வெளியாகியிருக்கின்றன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top