புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா தேனி மாவட்ட வனப்பகுதியில் இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அழுகிய நிலையில் அப்பெண்ணின் சடலத்தை காவல்துறையினர்
மீட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் வருசநாடு அருகே உடங்கல் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதி வனத்துறைக்குச் சொந்தமானது. இப்பகுதியில் அடிக்கடி யானை போன்ற வன விலங்குகள் அதிகம் நடமாடுவதால், மக்கள் இங்கு அதிகம் வருவதில்லை. வனத்துறையைச் சேர்ந்தவர்கள் மட்டும் தகுந்த பாதுகாப்புடன் இப்பகுதியை கண்காணித்து வருகின்றனர்.

உடங்கல் பகுதியில் இருந்து 300 மீட்டர் தொலைவில் சுமார் 16 வயது மதிக்கத்தக்க இளம்பெண் உடல் அழுகிய நிலையில் கிடந்ததை சிலர் பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த பெண் இறந்து சுமார் 15 முதல் 20 நாட்கள் ஆகி இருக்கலாம் என்பதால் உடல் அடையாளம் காணமுடியாதபடி காணப்பட்டது. யாரேனும் சில சமூக விரோதிகள் அந்த பெண்ணை கடத்தி கற்பழித்து கொலை செய்து விட்டு சென்றிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் தேனி அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து மருத்துவகுழுவினர் வந்து சம்பவ இடத்திலேயே பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை நடத்தினர். இறந்தவர் யார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.

கடமலைக்குண்டு, வருசநாடு, மயிலாடும்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காணாமல் போன இளம் பெண்கள் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இறந்தவர் யார் என்பது தெரிய வரும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top