புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தியாவில் குர்காவ்னில் அடையாளம் தெரியாத நபர்களால் கற்பழிக்கப்பட்ட5 வயது சிறுமி, தற்போது சப்தர்ஜங் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

குர்காவ்னில் 5 வயது சிறுமி அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று கடத்தி கற்பழிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அவர்கள் சிறுமியை சிக்கந்தர்பூர் மெட்ரோ நிலையம் அருகே உள்ள இடத்தில் வீசிச் சென்றுவிட்டனர்.

சுயநினைவின்றி ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமி சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.

அவருக்கு உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் குற்றவாளிகள் 3 பேரை தேடி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top