புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

குவைத்தில் நாளை தூக்கு தண்டனை விதிக்கப்பட தனது மகனை காப்பாற்ற வேண்டும் என அவரது தாயார் மத்திய அரசுக்கு கோரிக்கை
விடுத்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த ஷண்முகசுந்தரம் என்பவரின் மகன் சுரேஷ்குமார் குவைத் நாட்டில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

கடந்த 2008-ம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த பாத்திமா என்ற பெண்ணை கொலை செய்ததாக சுரேஷ், தாஸ், நித்யா ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதில் தாஸ் என்பவர் சுரேஷ்குமாருக்கு கொலையில் தொடர்பில்லை என்று கூறினாலும் கூட அந்நாட்டு கோர்ட் சுரேஷ்குமாருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

நாளை இவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் அவரது தாயார் மல்லிகா இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பின்னர் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தை சந்திக்க சிவகங்கை சென்றுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top