புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அவுஸ்திரேலியாவில் அலுவலக நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க சென்ற ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவுஸ்திரேலியாவின மெல்போர்ன் நகரில் உள்ள ஏஜிஸ் அவுஸ்திரேலியா என்ற கால் சென்டர் நிறுவனத்தில், ஏராளமான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

இங்குள்ள ஊழியர்களின் வருகைப்பதிவை கணக்கிடவும், பணி நேரத்தில் இருக்கைகளிலிருந்து அனாவசியமாக எழுந்து செல்லாமல் இருக்கவும் விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன் படி ஒவ்வொரு ஊழியரின் மேஜையிலும் ஒரு எலக்ட்ரானிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழியர் தன் இருக்கையை விட்டு 90 வினாடிகளுக்கு மேல் எழுந்து சென்றால், அவர்களின் கணினி தானாகவே லாக் ஆகிவிடும்.

அதன் பின் எழுந்து சென்றதற்கான காரணத்தை பதிவு செய்த பின்னரே கணனி மீண்டும் செயல்பட தொடங்கும்.

இவ்வகையில் அடிக்கடி சிறுநீர் கழிக்க சென்றதாகக் கூறி, அந்நிறுவன ஊழியர்கள் மூன்று பேரின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மூவரும் வழக்கு தொடர்ந்தனர்.

இதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த காரணத்தால், இயந்திரக் கோளாறு காரணமாகவே சம்பளத்தில் பிடித்தம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி மூன்று ஊழியர்களுக்கும் சரியான சம்பளத்தை நிறுவனம் வழங்கியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top