புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கண்டி பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதிகள் இருவர் உட்பட 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


கட்டுகஸ்தோட்டை பகுதியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த வான் ஒன்றும் அஸ்கிரிய பகுதியிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த வான் ஒன்றுமே ஒன்றுடனொன்று மோதி விபத்திற்குள்ளானது.

அதிகாலை 03 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

2 வாகனங்களும் வீதிப் போக்குவரத்து விதிகளை மீறி பயணித்தமையே இந்த விபத்துக்கு காரணமாக அமைந்தது என கண்டி போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top